அம்மாவைச் சந்தித்தார் மு.க.அழகிரி.. அப்பா வருவதற்குள் வீட்டிலிருந்து கிளம்பினார்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
அதன் பின்னர் தனது தந்தை திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வருவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. அதைத் தொடர்ந்து அவர் தனித்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் தற்போது மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க அழகிரி தரப்பைச் சேர்ந்த கருணாநிதியின் குடும்பத்தார் முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக பொருளாளரும், அழகிரியின் தம்பியுமான ஸ்டாலின் கூறுகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அழகிரி, அந்த அதிகாரம் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் மட்டும்தான் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் நேற்று இரவு கோபாலபுரம் வந்தார் அழகிரி. அங்கு தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அழகிரி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அழகிரி தயாளு அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக தலைவர் கருணாநிதி சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. அழகிரி புறப்பட்டுப் போனவுடன் அவர் கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications