பிரச்சாரத்தில் தாசில்தாரை தாக்கிய வழக்கு: அழகிரி மேலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரைத் தாக்கிய வழக்குத் தொடர்பாக அடுத்தமாதம் 27ம் தேதி மு.க.அழகிரி நேரில் ஆஜராக மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மேலூர் அருகே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் மு.க.அழக்இரி. அப்போது கோவிலுக்குச் சென்ற அழகிரியை தாசில்தார் காளிமுத்து வீடியோ படமெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அழகிரி மற்றும் அவருடன் சென்ற தொண்டர்கள் காளிமுத்துவைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அப்பகுதி மக்கள் சிலரும் காயமடைந்தனர். இது தொடர்பாக அழகிரி உட்பட 21 பேர் மீது மேலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், வழக்கில் தொடர்புடைய 9 பேர் மட்டுமே ஆஜரானார்கள். அழகிரி உட்பட மீதமுள்ள 12 பேர் ஆஜராகவில்லை.
இதுதொடர்பான வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, அன்றைய தினம் அழகிரி உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications