முச்சத நாயகன் கருண் நாயருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயருக்கு திமுக பொருளாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனையை புரிந்துள்ள இந்திய வீரர் கருண் நாயருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ராகுலின் சதத்தாலும், கருண் நாயரின் இரட்டை சதத்தாலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் முச்சதம் விளாசினார். அவர் 381 பந்தில் 32 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் குவித்து கடைசி அவரை அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தநிலையில் முச்சதம் அடித்து சாதனை புரிந்த கருண்நாயருக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் அஸ்வினின் சிறந்த பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications