பினாமி முதல்வர்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் 3இன்படி, பேரவையை ஆளுநர் அவர்கள் தான் கூட்ட வேண்டும். அரசின் சார்பில் ஆளுநருக்கு கூட்டத்தை எப்போது கூட்டவேண்டுமென்று பரிந்துரை செய்யலாம். மேலும் பேரவை விதிகள் 55 மற்றும் 56இன்படி பேரவை நடைபெறும்போது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஒரு உறுப்பினர் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு உரிமை உண்டு என்கிற போது, ஒரு உறுப்பினர் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதற்காக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று கேட்கும்போது, முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவர், உறுப்பினர் ஆலோசனை கூற வேண்டாம் என்று பதில் அளிப்பது அவை உரிமை மீறல் நடவடிக்கையா இல்லையா என்பதை பேரவை விதிகளை இனியாவது பினாமி முதலமைச்சர் பன்னீர்செல்வம் படித்துப் பார்த்து தெளிவு பெற வேண்டும்.

M.K.Stalin released a statement…

ஓ. பன்னீர்செல்வம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 2002 மார்ச் 1ஆம் தேதி வரை பொறுப்பிலே இருந்த போது, சட்டப் பேரவையை ஒரு முறையாவது கூட்டியது உண்டா? பொதுவாக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் மாறி, வேறொருவர் முதல்வர் பதவிக்கு வருகின்ற போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கூட்டி, மாறுதலுக்கான தன்னிலை விளக்கத்தை அளித்து, நாட்டிலே நிலவும் அவசர முக்கியத்துவமான பிரச்சினைகளைப் பற்றி யெல்லாம் விவாதிக்க வேண்டியது ஜனநாயக நாட்டிலே கடமையா இல்லையா என்பதை பன்னீர்செல்வம் அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே தி.மு.க. விலே தந்தைக்கும், தனயனுக்கும் பனிப்போர் என்றெல்லாம் அந்தக் கட்சியிலே உள்ள நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல, தான் தற்போது முதலமைச்சர் என்ற தற்காலிகத் தகுதியைக் கூட மறந்து விட்டு என்னைக் கிண்டல் செய்திருக்கிறார். பன்னீர்செல்வம் போன்றவர்கள் இப்படியெல்லாம் பிரச்சினைகளைக் கிளப்பி, சில வார ஏடுகளின் துணையோடு கழகத்தில் குழப்பம் விளைவிக்க முயலுவதை அறிந்து தான்,

நானே திட்டவட்டமாக தலைவர் கலைஞர் அவர்கள் தான் 2016ஆம் ஆண்டு தேர்தலில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக எங்களை யெல்லாம் வழி நடத்துவார் என்று தெரிவித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் என்றுமே தந்தைக்குக் கட்டுப்பட்ட தனயன்; தலைவரின் கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தொண்டன் - என்பதை என்னுடைய கட்சித் தோழர்களும், பொது மக்களும் நன்கறிவார்கள். எனவே பன்னீர்செல்வம் போன்ற கோணல் புத்திக்காரர்கள் குடும்பத்திற்குள் தந்தை, தனயன் என்றெல்லாம் கூறி குழப்பம் விளைவிக்க நினைத்தால், அது "ஆப்பசைத்த" நிலைக்குத் தான் ஆளாக நேரிடும். தற்போது அங்கே வகிக்கும் தற்காலிக முதலமைச்சர் பதவிக்கே "மன்னார்குடி" குடும்பத்தினரால் எப்போது இடைஞ்சல் வருமோ; அவர்களால் ஏற்பட்ட "பனிப்போர்" எப்போது முடியுமோ என்று தூக்கம் வராமல் புரண்டுப் புலம்பிக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வத்திற்கு இப்படி அறிக்கை விடுவது வெட்கக்கேடு அல்லவா? அல்லது எங்கோ ஒரு தோட்டத்திலிருந்து அனுப்பப் பட்ட அறிக்கையிலே அப்படியே கையெழுத்திட வேண்டிய கொடுமை அவமானம் இல்லையா?

மேலும் பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பேரவையில் நடந்து கொண்ட முறையை நாடகம் என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார். பன்னீர்செல்வம் அவர்களே, நீங்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள், இன்னும் அரசு அலுவலகங்களில் உங்கள் புகைப்படம் கூட இடம் பெறவில்லை, உங்களை ஐ.ஏ.எஸ். அதகாரிகளும் மற்ற மூத்த அலுவலர்களும் முதல்வராகவே கருதவில்லை.

உங்கள் அறை வாசலில் முதல்வரின் அறை என்று கூட பலகை மாட்டப் பட்டதாகச் செய்தி இல்லை. முதல்வர் என்ற அழைத்துக் கொள்ளக் கூட வெட்கப்படுகிறீர்கள். இந்த நிலையில் இப்படியெல்லாம் அறிக்கை விடுவது உங்கள் பதவிக்கு உகந்ததல்ல. தமிழக மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கப் பேரவையைக் கூட்டுங்கள், அல்லது கூட்டாமல் இருங்கள்.

உங்களுடைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி, தமிழ்நாட்டு மக்கள் தக்க நேரத்தில் முடிவுக்கு வருவார்கள். ஆனால் "ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை" என்று சர்வாதிகாரப் பாணியில் எடுத்தெறிந்து பேச முற்படுவது "பன்னீர்செல்வம்" என்ற பெயருக்குப் பெரும் இழுக்கைத் தேடிக் கொடுத்து விடும். எனவே பன்னீர்செல்வம் அவர்களே "நா காக்க!" "நா காக்க!" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+