"வருங்கால நிரந்தர முதல்வர் தயாநிதி அழகிரி".... புதிய ஃபேஸ்புக் பக்கத்தால் சலசலப்பு
சென்னை: தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா? மு.க.ஸ்டாலினா என்ற பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் அடுத்த தலைமுறை இடையே பஞ்சாயத்து கிளம்பிவிட்டது.
2016ம் ஆண்டில் ஸ்டாலின் முதல்வர் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பல கணக்குகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் பகிரப்படுகின்றன. இதற்குப் போட்டியாக தயாநிதி அழகிரியை உசுப்பேற்றி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்

‘வருங்கால நிரந்தர முதல்வர் தயாநிதி அழகிரி' என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்து அதில் தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.
இந்தப்பக்கத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். செம காமெடி என்று ஒருவரும், எங்க அண்ணனை எதிர்த்தால் முதல்வர் வேட்பாளராக கூட ஆக முடியாது என்று மற்றொருவரும் பதிவிட்டுள்ளனர்.
ஸ்டாலின் அவரது அண்ணன் அழகிரி இடையேயான போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை இதில் தயாநிதி அழகிரியை வேறு உசுப்பேற்றி விடுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இது எங்கே போய் முடியுமோ?
அதே நேரத்தில் இதில்போடப்படும் பதிவுகளைப் பார்த்தால் தயாநிதி அழகிரியை வம்பில் மாட்டுவிட்டு கலாய்க்கிற நோக்கத்துடன் இக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications