முதல்வர் ஓபிஎஸ்சுக்கு 66வது பிறந்த நாள்… மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் 66வது பிறந்த நாளான இன்று மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் 66வது பிறந்த தினம் இன்று. இவருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில், 66வது பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளும், பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தொலைபேசியில் தெரிவித்தேன். அவருடைய பொது வாழ்வு சிறக்கவும், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றவும் வாழ்த்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, எதிர்க்கட்சித் தலைவர்களும், ஆளும் கட்சித் தலைவர்களும் இப்படி ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வது முற்றிலும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தின் இரு பெரும் கட்சியின் தலைவர்கள் சந்தித்துக் கொள்வதும், கோரிக்கை மனுக்களை கொடுப்பதும், பெறுவதும், வாழ்த்துகள் சொல்வதும் என்ற பண்பாடு உருவாகியிருப்பது தமிழக அரசியல் சூழலில் நல்ல ஒரு மாற்றமாக பொதுமக்களால் கருதப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications