அர்ச்சனைகளுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் - கருணாநிதி
அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி - அதிலே என்னை மிக மோசமாக, தரக்குறைவாகக் குறிப்பிட்டு வசை பாடியிருப்பதைப் பற்றி எனக்கு முன்னால் பேசிய அருமைத் தம்பி கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இங்கே எடுத்து விளக்கினார்.
தி.மு. கழகத்தினுடைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நாகரிகத்தையும், எடுத்தாண்ட பண்பாட்டையும் எடுத்துக்காட்டி, அ.தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையும் ஒப்பிட்டுக் காட்டி, இந்த இரண்டு படங்களையும் பாருங்கள், எது பண்பார்ந்த படம், எது அறிவார்ந்த படம், எது அரசியல் ரீதியான படம் என்பதை உங்களிடத்திலே அவரும் விளக்கியிருக்கின்றார்.
நம்முடைய தம்பி அன்பழகனும் விளக்கியிருக்கின்றார். நம்முடைய இளங்கோவனும் விளக்கியிருக்கின்றார். இன்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக என்னைப் பற்றி, என்னுடைய பொது வாழ்க்கையைப் பற்றி, நான் ஆட்சி புரிந்த திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பற்றி, என்ன சாதித்தீர்கள்? என்று ஜெயலலிதா இன்றைக்கும் கேட்கிறாரே? அதைப்பற்றியெல்லாம் அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.
நான் அவர்களுக்குப் பதில் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் சென்னை மாநகரத்தைப் பார்ப்பவர்கள், தமிழகத்திலே இருக்கின்ற நிலைமையை உணர்ந்தவர்கள், மின்சாரப் பற்றாக்குறையினால் அவதிப்படுகின்ற மக்களுடைய அல்லலை எண்ணு கின்றவர்கள் , இந்த ஆட்சியை எப்படிப் பாராட்ட முடியும், எப்படிப் போற்ற முடியும், எப்படிப் புகழ முடியும் என்பதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.
16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றார்கள், அவர்கள் இப்பொழுது நடத்திய அ.தி.மு.க. பொதுக் குழுவில். அதிலே மிக நீண்ட தீர்மானம் என்னை முழுக்க முழுக்க அர்ச்சனை செய்து நிறைவேற்றப் பட்ட தீர்மானம். நான் இந்த அர்ச்சனைகளுக்கெல்லாம் மனம் கலங்குகின்றவன் அல்ல. ஏனென்றால் எவ்வளவு மகா மோசமான அர்ச்சனைகளை யெல்லாம் கேட்டுக் கேட்டுப் பழகித்தான் இந்த இயக்கத்தை ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வளர்த்து இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு வயது 90ஐ தாண்டி விட்டது. 91ஐ தாண்டி விட்டது என்றெல்லாம் சொன்னாலும் கூட, அதிலே என்னுடைய பொதுவாழ்வுக்கு வயது 70க்கும் மேற்பட்ட வயதாகும். இந்த 70க்கும் மேற்பட்ட வயதில் பொது வாழ்வில் நான் கேட்காத அர்ச்சனை இல்லை. நான் பார்க்காத, நான் உணராத, நான் சந்திக்காத, என்னை துன்புறுத்தாத நிலைமைகள் இல்லை. அவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், திராவிட முன்னேற்றக் கழகம் என்னுடைய உயிர், என்னுடைய மூச்சு, அந்தக் கழகத்தைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதற்காகக் கவலைப்படாமல், கழகத்தினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற என்னைப் பற்றி யார் எவ்வளவு தாக்கினாலும், ஏன் என் மீது காறி உமிழ்ந்தாலும்கூட, அதையும் துடைத்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்ற (கைதட்டல்) ரத்தம் சிந்தக் கூடியவன்தான் (பலத்த கைதட்டல்) இந்தக் கருணாநிதி என்பதை நான் அவர்களுக்கும் தெரிவிக்கின்றேன். உங்களுக்கும் ஞாபகப்படுத்துகின்றேன்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications