திராவிட இயக்கத்தை உருவாக்கி - பாடுபட்டோர் பட்டியலில் என் பெயர் இருக்கும்
இன்று நேற்றல்ல, நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களைச் சந்தித்த அந்தக் காலம் தொட்டு, 1941, 42ல் திருவாரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அந்தத் தேதியிலே தொடங்காவிட்டாலும், திராவிடர்களுடைய எழுச்சியை, திராவிடர்களுடைய உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற பெரியாருடைய எண்ணங் களுக்கு வலிவு சேர்க்கின்ற வகையிலே அன்றைக்கே மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம் இவைகளை யெல்லம் உருவாக்கிப் பாடுபட்ட அந்தப் பட்டியலிலே என்னுடைய பெயர் உண்டு.
அப்பொழுது இவர்களுடைய பெயரெல்லாம் கிடையாது. அப்பொழுது இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. றிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள், தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்று சொன்னாலும்; அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும், இரண்டையும் சமமாகக் கருதுகிறவன்தான் என்னுடைய தம்பி கருணாநிதி என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதை விடவா ஜெயலலிதா எனக்குக் கொடுக்கின்ற பட்டம் பெரிது? அதை விடவா இந்தப் புகழுரை பெரிது? அதைவிடவா இந்தப் பாராட்டு எல்லாம் எனக்குப் பெரிது?.

என்னை தீய சக்தி என்கிறார் ஜெயலலிதா. தம்பி துரைமுருகன் வருத்தப்பட்டார். கனல் கக்க அதை மறுத்துப் பேசினார். நான் தீய சக்தியா, நீ தீய சக்தியா என்பது நாட்டுக்குத் தெரியும்.
நான் இந்த வயதிலும், ஜெயலலிதா போன்றவர்களால் தீய சக்தி என்று வர்ணிக்கப்படுகின்ற அளவிற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால் யாருக்கு நான் தீய சக்தியாகத் தெரிகிறது? யாருடைய கொடூரமான செயல்களால், யாருடைய நச்சுத் திட்டங்களால், யாருடைய நாட்டை அழிக்கின்ற செயல்களால், தமிழ்நாட்டு மக்கள் அல்லல்படுகிறார்களோ, தமிழ் நாட்டு மக்கள் அவதிப்படுகிறார்களோ, அவர்களை யெல்லாம் அத்தகைய செயல்களிலிருந்து காப்பாற்ற, அவர்கள்மீது நெருப்பை உமிழ வேண்டும் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட சக்திகள் மீது நெருப்பை உமிழவும், அப்படிப்பட்ட காரியங்களிலே, நானே என்னை பலி கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், அதற்குத் தயாராகவும் இருப்பவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications