கடைசி மூச்சுவரை தமிழ் மக்களுக்காகவே பாடுபடுவேன் - கருணாநிதி

எனக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறார் அம்மையார். என்ன காரணங்களைச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நான் திருவாரூரில் ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே"" என்று முழங்கி, கையிலே புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியைப் பிடித்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்ட காலத்தில்; பிறக்கக் கூட இல்லை இந்த அம்மையார். அவர்களுக்கு என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்ற அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது. எண்ணம் வாய்த்திருக்கிறது. நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களல்ல, எல்லா மக்களுமே என்னைப் புறக்கணித்தாலும்கூட, நான் செய்த காரியங்களை, நான் ஆற்றியப் பணிகளை, நான் ஈடுபட்ட போராட்டங்களையெல்லாம் கவலைப்படா மல் மறந்துவிட்டு இன்றைக்கு மக்கள் நம்மைப் புறக்கணித்து விட்டார்கள் என்றால், இப்படி ஒரு ஓய்வு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றைக்கும் ஏற்படாது. அந்த ஓய்வை அவர்கள் தரமாட்டார்கள். நான் இந்த உடலிலே உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிற வரையில், என்னுடைய உடல் மயானத்திற்குச் செல்கின்ற வரையில், என்னுடைய கடைசி மூச்சை நான் விடுகின்ற வரையில், திராவிட மக்களுக்காக, தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக நான் பாடுபடுவேன், பணியாற்றுவேன் (பலத்த கைதட்டல்) என்பதை மாத்திரம் இங்கே குழுமியிருக்கிற தாய்மார்களுக்கும், பெரியோர் களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய உடன் பிறப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications