மத்திய அரசில் அங்கம் வகித்தும் ஒருநன்மையும் செய்யவில்லையா?

மாபாதகன்'', சுயநலவாதி'', தீயசக்தி'', தமிழ் இனத்துரோகி'' என்று இப்படியெல்லாம் என்மீது விமர்சனம். இது ஜெயலலிதா என் மீது பொழிந்திருக்கின்ற அன்பான அர்ச்சனை. நான் அதற்காக மகிழ்ச்சியடைகின்றேன்.
சுயநலவாதி'' என்றும், மாபாதகன்'' என்றும், இனத்துரோகி'' என்றும், தீயசக்தி'' என்றும் அவர்கள் வாரியிறைத்திருக்கின்ற வார்த்தைகளைப் பார்த்தால் எனக்கு ஒரு வகையிலே அந்த அம்மையாரைப் பாராட்டவும் தோன்றுகிறது. இனத் துரோகி என்று சொன்ன காரணத்தால், இனம் என்று ஒன்று இருப்பதை இந்த அம்மையார் தெரிந்தோ தெரியாமலோ ஒத்துக் கொண்டிருக் கிறாரே என்ற அந்த எண்ணம்தான்.
மாபாதகன்'', சுயநலவாதி'', தீயசக்தி'', தமிழ் இனத்துரோகி'' என்று சொல்லுகின்ற காரணத்தால் தமிழ் என்று ஒன்று இருப்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதிலே எனக்கு மகிழ்ச்சிதான். எப்படி மகிழ்ச்சி என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே மத்தியிலே இல்லாவிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே இருந்த அரசோடு நட்பு கொண்டு, பங்கு பெற்றுப் பணியாற்றி னாலும் அந்தக் கழகத்தினுடைய சாதனைகளாக சோனியா காந்தி அம்மையாரிட.த்திலே எங்கள் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டு வாதாடி, போராடி அதைப் பெற்றுத் தந்த பெருமை எனக்கு அல்ல, என்னை வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. (கைதட்டல்)
தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை, விருதினை நாம் பெற்றிருக்கிறோம் என்றால், அந்தத் தமிழுக்கு, அந்தப் பெருமையை நாம் இன்றைக்கு உருவாக்கி யிருக்கிறோம் என்றால், அதைப் பாராட்ட, மகிழ்ச்சி யோடு வரவேற்க வேண்டிய தமிழகத்தின் முதல மைச்சர் ஜெயலலிதா அதையே மறந்து விட்டு, என்னை தமிழ் இனத் துரோகி என்று சொல்லுகிறார்.
பிற்காலத்தில் ஜெயலலிதாவைப் போன்ற ஒருவர் தமிழ்நாட்டின் சரித் திரத்தை எழுதுவாரே யானால் - வேண்டாம், அந்த விபரீதம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் - ஒரு வேளை எழுதுவாரேயானால் - அவர் என்ன எழுத வேண்டும்? தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு புது அந்தஸ்தை, செம்மொழி என்ற அந்தஸ்தை, நூறாண்டு காலமாக பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம், வல்லுநர்கள் எல்லாம் கேட்ட அந்தத் தகுதியைப் பெற்றுத் தந்தவன் கருணாநிதி என்ற அந்தக் கருத்தை எழுதும்போது, இவர்கள் என்ன செய்வார்கள்? ஜெயலலிதா அப்போது இருந்தால், நானும் இருந்தாலும் என்னைப் பாராட்டுவார்களா? பாராட்ட மாட்டார்களா? ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு போற்றுகின்ற, புகழுகின்ற, பாராட்டுகின்ற ஒரு காரியத்தை நான் செய்தேன் என்பதற்காக பாராட்டுகின்ற குணம் ஜெயலலிதாவுக்குக் கிடையாது. இல்லாத காரணத்தி னால்தான், இங்கே சென்னை மாநகரத்திலே செம்மொழிப் பூங்கா என்று நான் அமைத்த ஒரு அருமையான பூங்காவை இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக மறைக்கச் செய்தார். மூடச் சொன்னார்.
செம்மொழிப் பூங்கா அங்கே இல்லை. தற்போதும் அங்கே பராமரிப்பே இல்லாத நிலைதான் உள்ளது. அதைப் போலத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட் டுள்ள மிகப் பெரிய நூலகம், இந்தியாவிலே மாத்திர மல்ல, இந்தியாவைச் சுற்றியுள்ள மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலே கூட இப்படிப்பட்ட பெரிய நூலகம் இல்லை என்று எல்லோராலும் புகழப்பட்ட நூலகம் அது. சோனியா காந்தி அம்மையார் பார்த்து விட்டு, பாராட்டிய நூலகம். ஏன், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், சென்னைக்கு வந்த போது, அதைப் பார்த்து விட்டுப் பாராட்டியபோது நாம் மகிழ்ச்சியடைந்தோம்.
ஆனால் அது இந்த அம்மையாருக்குப் பொறுக்கவில்லை. அந்த நூலகத்தை மருத்துவ மனையாக மாற்றுவதற்குத் திட்டம் போட்டார். நாம் எதிர்ப்போம் என்ற காரணத்தால், எதிர்த்து நின்றோம் என்ற காரணத்தால், நாம் மாத்திரமல்ல, மாணவர்கள் படையும் அதை எதிர்த்து களம் அமைத்த காரணத்தால், அதை பாழாக விட்டிருக்கிறார்களே தவிர, நான் அதைத் திறந்து நடத்த விட மாட்டேன் என்ற வகையிலே அதைப் பாழ்படுத்தி வருகிறார்கள். பராமரிப்பு இல்லாமல் அந்த நூலகம் இன்று இயங்கி வருகிறது.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications