சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Recommended Video

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார்.

ஒரே மாதத்தில் நடராஜன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் தான் வழக்கமாக வசிக்கும் வீட்டில் இருக்காமல், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் நடராஜன்.
இந்நிலையில் நேற்று திடீரென ம. நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராஜனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள அவரை பார்க்க சசிகலா பரோல் கேட்டு சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications