"அம்மா" ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தார் தீபா கணவர் மாதவன்

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம அனுசரிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்தார்.

உடல்நலக் குறைபாடுகள் காரணமாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

Madhavan gave tithi for Jayalalitha

ஜெயலலிதாவின் சமாதியில் பொதுமக்களும், தொண்டர்களும், அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். இன்னும் சிலரோ அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுத்தால் அவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பதும், விண்ணுலகத்தில் இருந்து அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தீமை அண்டாமல் பார்த்துக் கொள்வர் என்பதும் ஐதீகம்.

Madhavan gave tithi for Jayalalitha

அதன்படி தீபாவின் கணவர் மாதவன் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தார். மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் மாதவன், ஜெயலலிதாவின் மூன்று தலைமுறையினரின் பெயரை சொல்லி திதி கொடுத்தார்.

முன்பு ஒரு பேட்டியில் ஜெயலலிதா எனது மனைவிக்கு அத்தை என்றால் எனக்கு தாய்தான் என்று மாதவன் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+