For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத்திலேயே முதல் முறையாக முதல்வருக்கே மாற்று வேட்பாளர் போட்ட கட்சி.. "நம்ம" கட்சிதான்!

Google Oneindia Tamil News

சென்னை: வெறும் வாயை மெல்பவர்களுக்கு கூட கொஞ்சம் வெற்றிலையும், பாக்கையும் சேர்த்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்.. அப்படி ஆகி விட்டது அதிமுகவினரின் நிலை.

அதிமுக தரப்பை வறுத்தெடுத்துக்கக் காத்துக் கொண்டிருந்தவர்களின் வாய்களை இவர்களே திறந்து வெற்றிலையை வைத்து மெல்லிசாக சுண்ணாம்பும் தடவி கூடவே அஜந்தா பாக்கையும் திணித்து இல்ல நல்லா மெல்லுங்க என்று சொல்வது போல அமைந்து விட்டது சமீப கால நிகழ்வுகள்.

Madhusoodanan and Jaya's car

அதாவது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது கூடவே அதிமுகவின் மாற்று வேட்பாளராக மதுசூதனன் மனு செய்தார். இவர் அதிமுக அவைத் தலைவர் ஆவார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரால் போட்டியிட முடியாமல் போனால் மாற்று வேட்பாளர் போட்டியிடுவார். இது சாதாரண நடைமுறைதான். ஆனால் முதல்வரான ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளர் போட்டதுதான் காமெடியாகி விட்டது. இப்போது உலகத்திலேயே முதல்வருக்கு மாற்று முதல்வர் வேட்பாளர் வைத்த ஒரே கட்சி அதிமுகதான் என்று கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரம் கணக்காக எதிர்க்கட்சியினர் காமெடி செய்து வருகின்றனர்.

அதேபோல இன்னொரு விஷயத்தையும் வைத்து எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். ஏன் வாட்ஸ் ஆப்பில் கூட இந்தக் காமெடி வலம் வருகிறது. ஜெயலலிதா எத்தனை வட்டச் செயலாளர்கள மாற்றியிருப்பார். எத்தனை மாவட்டச் செயலாளர்களை தூக்கியிருப்பார். எத்தனை அமைச்சர்களை காலி செய்திருப்பார்.. ஆனால் அவர் மாற்றாமல் வைத்துள்ள ஒரே விஷயம் சசிகலாவும், பழைய அம்பாசடர் காரும் தான் என்று அந்த காமெடி போகிறது.

வேட்பு மனுத் தாக்கலின்போது தன்னிடம் 35 வருடமாக ஒரு அம்பாசடர் இருப்பதாக ஜெயலலிதா தனது சொத்துக் கணக்கில் தெரிவித்திருந்ததை வைத்துதான் இந்த ஹாஸ்யம்.

English summary
ADMK leader Madhsoodanan and Jayalalitha's oldest car have become a talking topics of opposition parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X