கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்து விட்டு அரசியல் செய்கிறார் ஸ்டாலின்... மதுசூதனன் பாய்ச்சல்
கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்து விட்டு அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்பது அழகிரியின் குற்றச்சாட்டு. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்கிறார் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ் இந்து நாளிதழுக்கு மதுசூதனன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்.ஸையும் இணைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளது தேவையில்லாத குற்றச்சாட்டு. அப்படிப் பார்த்தால் எனக்குக்கூட ஒரு சந்தேகம் இருக்கிறது.

கருணாநிதி நிலைமை என்ன?
கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.

எல்லாமே நாடகம்
மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எல்லாம் நாடகம். கருணாநிதி குடும்பத்தில் இந்தி தெரியாதவர் யாரும் இல்லை.

திமுகவின் திட்டம்தான்
இப்போது மைல்கற்களில் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்களே, அன்று திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதானே இந்தத் திட்டமே வகுக்கப்பட்டது.

தேர்தல் வரும்போதுதான்...
அப்போது ஜெயலலிதா, பிரதமருக்கு இதுகுறித்து ஒரு கண்டன கடிதத்தை அனுப்பினார். தேர்தல் வரும்போது இவர்கள் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கிறார்கள்.
இவ்வாறு மதுசூதனன் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications