பொதுமக்கள்-போலீஸ் இணைந்தால் குற்றங்களை குறைக்கலாம்.. முன்மாதிரி மடிப்பாக்கம்!
சென்னை: பொதுமக்கள் உதவியோடு காவல்துறை எப்படி குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்பதற்கு சென்னை மடிப்பாக்கம் பகுதி ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு வரை, சிங்கிள் செயின் அணிந்து கொண்டு நடமாட அஞ்சியபடி இருந்த அப்பகுதி பெண்கள், தற்போது, காந்தி கனவு கண்ட பெண்களை போல, அடுக்கடுக்காக நகைகளை அணிந்து நள்ளிரவிலும் பயமின்றி உலவ முடிகிறது மடிப்பாக்கத்தில்.
இந்த மாற்றம் எப்படி சாத்தியப்பட்டது? என்ற கேள்விக்கு, காவல்துறை-மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு என்பதுதான் விடையாக இருக்க முடியும்.

செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கவனத்தை திசைதிருப்பி பணத்தை அபேஸ் செய்வது என கிரைம் ரேட் சகட்டு மேனிக்கு ஏறிப்போய் கிடந்த மடிப்பாக்கம் காவல் சரகத்தின் இன்ஸ்பெக்டராக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பொறுப்பேற்றவர் ச.சரவணன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசித்த இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு பளிச்சிட்டதுதான், சிசிடிவி காமிரா பொருத்தும் ஐடியா.
மடிப்பாக்கத்தில் எங்கெல்லாம் குற்றங்கள் அதிகம் நடந்தன என்ற பழைய ரெக்கார்டுகளை புரட்டிப் பார்த்த சரவணன், அந்த பகுதிகளில் சக்தி வாய்ந்த ஹெச்.டி தொழில்நுட்பம் கொண்ட ரகசிய காமிராக்களை பொருத்தி கண்காணிக்க முடிவு செய்தார்.

ரகசிய காமிராக்களை பொருத்த செலவுபிடிக்குமே என யோசித்த சரவணனுக்கு, மடிப்பாக்கம் குடியிருப்பு சங்கங்கள், பள்ளி நிர்வாகங்கள், வியாபார சங்கங்கள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் என பல தரப்பினரும் ஒத்துழைப்பு கரம் நீட்ட முன்வந்தனர். பல தரப்பு மக்களும் கொடுத்த, நிதியை கொண்டு, மறு மாதத்திலேயே, அதாவது செப்டம்பரிலேயே, சிசிடிவி பொருத்தும் பணி துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது 18 இடங்களில் மொத்தம் 21 ஹெச்.டி.காமிராக்கள் பொருத்தப்பட்டு, அது பரங்கிமலை டி.சி.பி கல்யாண் மூலமாக பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த காமிராக்களால் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கிறார் இன்ஸ்பெக்டர் சரவணன்.
இதுகுறித்து 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திடம் பேசிய சரவணன் மேலும் கூறியதாவது: போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், துணை கமிஷன் கல்யாண் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பின்பேரில், சிசிடிவி திட்டம் மடிப்பாக்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
முன்பெல்லாம் நான்கைந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் இப்போது ஒன்று அல்லது பூஜ்யம் என்ற அளவில் செயின் பறிப்பு சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை 24 மணிநேரமும், நேரடியாக பார்வையிட காவல் நிலையத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எனது செல்போன் மற்றும் ஐபேட் போன்றவற்றின் மூலமாகவும், எங்கிருந்தாலும் நேரடியாக கண்காணிக்க முடிகிறது.
சென்னையின் சில பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்தாலும், மடிப்பாக்கத்திலுள்ள காமிராக்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவை. ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணைக்கூட தெளிவாக படமாக பிடித்துவிட இந்த காமிராவில் வசதியுள்ளது. விளக்குகள் வெளிச்சத்தின் உதவியுடன் இரவு நேரத்திலும், தெளிவாக கண்காணிக்க முடியும்.
இந்த பணிக்காக, சுமார் 11 கி.மீ தூரத்திற்கு பைபர் கேபிள்களை அமைத்துள்ளோம். டிவி, மானிட்டர், காமிரா உள்ளிட்ட வசதிகளுக்காக சுமார் ரூ.7.5 லட்சத்தை செலவிட்டுள்ளோம். திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் பல குடியிருப்பு சங்கங்களும், காவல்துறையை அணுகி, தங்கள் பகுதியிலும் காமிரா பொருத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, கூடுதலாக 15 காமிராக்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
மடிப்பாக்கம் ஏரியா முழுவதுமே விரைவில் காமிராக்களின் கண்காணிப்பில் கொண்டுவரப்படும் என்று கூறும் இன்ஸ்பெக்டர் சரவணன், கீழக்கட்டளை ஜங்ஷன் பகுதியில் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.5 லட்சம் பறித்து ஓடிய நபரை காமிராவின் உதவியால் கையும் களவுமாக பிடித்ததாகவும், மேலும் சில செயின் பறிப்பு திருடர்களும் பக்காவாக சிக்கியதாகவும் தெரிவிக்கிறார்.
காவல்துறையோடு, பொதுமக்கள் கைகோர்த்தால் சமூக விரோதிகளுக்கு நடுக்கம்தான் என்பதை மடிப்பாக்கம் பறைசாற்றுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications