வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ... 3000 பேர் பாதிப்பு - புதிய வைரஸ் காரணமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன் எப்போதும் இல்லாத அளவாக இம்முறை மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ அதிகளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் சராசரியாக 70 பேர் வீதம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications