'சூழ்நிலை மாறியுள்ளது'.. நளினி பரோல் வழக்கில் ஹைகோர்ட்டில் தமிழக அரசு கருத்து!
சென்னை: நளினி விவகாரத்தில் தற்போதைய சூழ்நிலை மாறியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தையை உடன் இருந்து கவனிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவிற்கு கடந்த சிலவாரங்களுக்கு முன்பு பதில் அளித்த தமிழக அரசு, நளினியை பரோலில் விட்டால் சட்டம்- ஒழுங்கு சீரடையும் என்று கூறியிருந்தது.

இதனிடையே, நளினி உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடை பெற்றது.
இந்நிலையில், நளினி பரோல் கேட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், நளினி விவகாரத்தில் தற்போதைய சூழ்நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நளினி உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பரோல் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications