ஆசிட் வீச்சில் இளம்பெண் பலி... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்
சென்னை: ஆசிட் வீச்சில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வித்யா. கடந்த 2013-ம் ஆண்டு ஆசிட் வீச்சில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாஸ்கர் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அப்போது, விஜயபாஸ்கருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications