ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு- விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் நவம்பர் 13-ந் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடலோர காவல்படையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மீனவர்கள் தமிழில் பேசியுள்ளனர். அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும் என கடலோர காவல்படையினர் மிரட்டியுள்ளனர்.
ஆனால் இந்தி தெரியாது என மீனவர்கள் கூறியுள்ளனர். இதனால் மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஜான்சன், பிச்சை என்கிற மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெளரியா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றமே தாமாகவே முன்வந்து விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications