சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரிய தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களின் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரிய 6 தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பனை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி உள்பட 6 பேர் தாக்கினர்.

இது தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

Madras HC quashes the plea against the suspension of DMDK MLAs from Assembly

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+