இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை- மதுரை ஹைகோர்ட் அதிரடி!
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மாடுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனேர் என்று கூறப்படுகிறது. மேலும் தனி மனி உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவசர மனு
மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்பு கொண்டதையடுத்து, மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

உரிமையில் தலையீடு
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மத்திய அரசு தனி மனிதனின் அடிப்படை உணவு உரிமையில் தலையிடுவதாக வாதிட்டது. எனவே இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

அவகாசம்
தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் சுவாமிநாதன் மனு அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்கப்பட்டதால் இது குறித்து விளக்கமளிக்க அவகாசம் தேவை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2017 மிருகவதைத் தடுப்பு சட்டம் மாநில அரசுக்க்ம பொருந்துமாக என்பதை விளக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இடைக்காலத் தடை
மேலும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் இந்த 4 வார காலத்திற்கு இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டமாக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் கடைசி வரை பாதிப்பில்லை
தமிழகம் முழுவதும் மாட்டிறைச்சி தடையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவால் ஜூன் மாத இறுதி வரை இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கொண்டு செல்வதற்கான தடை இடைக்காலமாக நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications