மது விற்பனை நேரத்தைக் குறைக்க பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரும் கோரிக்கைகளை பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எல்.ராஜா மது விற்பனை மூலம் அரசுக்கு மாதம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்
இதனைக் கேட்ட நீதிபதிகள் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென்றும் அரசியல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
டாஸ்மாக் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசு தான் முடிவெடுத்து உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்
குடிப்பழக்கத்திலிருந்து விடுபட மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற யோசனைகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அதைப் பரீசிலிக்க அரசுக்கு உத்தரவிட முடியுமென்று கூறிய நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications