விஜயகாந்தை குண்டாஸில் கைது செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராமன் அதிமுக பிரமுகரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய விஜயகாந்த், தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை ஆவதூறாக பேசியதோடு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டார். அதேபோல தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் முதல்வரை விமர்சிப்பதும், சட்டம் ஒழுஙகு பிரச்சனையை ஏற்படுத்துவதுமாக விஜயகாந்த் பேசி வருகிறார்.

எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை விஜயகாந்த் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அதனை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அவர் மீது ஏற்கனவே பல்வேறு அவதூறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சாவூர் காவல்துறைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு செவ்வாய் அல்லது புதன் அன்று நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications