கட்சி அலுவலகம் கட்ட ரூ.13 கோடி கடன்: இ.கம்யூனிஸ்ட் தா.பாண்டியனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கட்சி அலுவலகம் கட்ட வங்கியில் ரூ.13 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு வங்கிக் கடன் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடலூர் அருகே உள்ள கொண்டூரைச் சேர்ந்த பி.ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கவுன்சில், சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் 10 கிரவுண்ட் இடத்தை வாங்கியது. அங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன் அளித்த பரிந்துரையை மாநிலக் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
கட்டிடத்துக்காக நிதியும் திரட்டப்பட்டது. கடலூர் மாவட்டம் சார்பில் ரூ.2 லட்சம் கொடுத்தோம். ஆனால், மாநிலக் கவுன்சிலுக்கு தெரியாமல் கட்சியின் சொத்து ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து 13.5 சதவீத வட்டிக்கு ரூ.13 கோடியை கடனாக தா.பாண்டியன் வாங்கியது தெரியவந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி வழக்கு தொடர்ந்திருப்பது பத்திரிகை மூலம் தெரியவந்தது.
கட்சியின் அலுவலக கட்டுமானச் செலவு ரூ.7.5 கோடிக்குமேல் இருக்காது. கட்சியின் சொத்தை அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு தா.பாண்டியனுக்கு அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும்போது வங்கி அதிகாரிகள் எப்படி கடன் கொடுத்தனர்? இது சட்டவிரோதமாகும். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் நோட்டீஸ்
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அய்யாத்துரை ஆஜரானார். தா.பாண்டியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், வங்கியின் ஊழல் தடுப்புப்பிரிவு தலைமை மேலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications