அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தை கோமாளியகாவே பார்க்கிறேன்: ராம. கோபாலன்
கோவை: அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தை ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த தேர்தல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றிவிட்டு மோடியை பிரதமர் ஆக்க இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாடுபடுகிறார்கள்.
இந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. இந்துக்களுக்கு ஆதரவான அரசு மத்தியிலும், மாநிலத்திலும் அமைய வேண்டும் என்று இந்து முன்னணி பாடுபடுகிறது. மத்திய-மாநில அரசுகள் பெரும்பான்மை மக்களான இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.
மோடி பிரதமர் ஆனால் நாட்டை முன்னேற்றுவார். அதனால் மோடிக்கு வாக்களிக்குமாறு வீடு, வீடாக சென்று மக்களை கேட்கவிருக்கிறோம். அனைவரும் மோடிக்கு வாக்களித்து அவரை பிரதமர் ஆக்க வேண்டும். மோடியின் மனைவி பற்றி சிலர் விமர்சித்து வருகிறார்கள். சில பெரிய தலைவர்கள் செய்யும் தவறுகள் பற்றிய புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் வெளியிட வேண்டியது இல்லை அது தானாகவே வெளிவரும்.
தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பாஜக எப்பொழுதுமே ஆதரவாக இருக்கும். அப்படி பாஜக இதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதை முதலில் நாங்கள் தான் எதிர்ப்போம்.
கோவில் நிலங்கள் 6 லட்சம் ஹெக்டேர் பயன் இல்லாமல் உள்ளது. அதனால் அரசு கோவிலை ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மடாதிபதிகள். இந்து முன்னணி போன்ற சமுதாய அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த பிரச்சனை தீரும் என்று நினைக்கிறேன்.
மதுரை ஆதீனம் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை நான் ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன். அவர் தனிப்பட்ட முறையில் பேசியபோதே யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. தற்போது மட்டும் அவரது ஆதரவுக்கு என்ன மதிப்பும், மரியாதையும் இருக்கும் என்று தெரியவில்லை. அவர் ஆதீனத்தின் மதிப்பை கொச்சைபடுத்திவிட்டார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications