ஜெயேந்திரர் விட்டு சென்ற பணியை விஜயேந்திரர் தொடருவார் என நம்புகிறோம்.. மதுரை ஆதினம் இரங்கல்
ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக சங்கரமடத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயேந்திரரின் மறைவுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார். கன்னியாகுமரியில் மத பிரச்சனை எழுந்தபோது அதனை சரிசெய்தவர் ஜெயேந்திரர் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார்.
மேலும் ஜெயேந்திரர் விட்டு சென்ற பணிகளை இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாகவும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காஞ்சி ஜெயேந்திரரின் மறைவுக்கு குன்றக்குடி அடிகளார் மற்றும் திருப்பனந்தாள் ஆதினம் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications