போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்... மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை
அலங்காநல்லூர் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்திய வெளியேற்றிய காவல்துறையினர் அலங்காநல்லூர் பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்திய போலீசார் அவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடித்து வைத்தனர்.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர்த் தலைவர்கள் விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் நிரந்தர சட்டத்துக்கான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
போலீசார் 30 நிமிடம் கெடு விதித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து அலங்காநல்லூர் முழுவதும் அணிவகுப்பு நடத்தி அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
தெருமுனைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளார். மேலும் மற்றப்பகுதிகளில் இருந்தும் போலீசார் அலங்காநல்லூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications