பிப்ரவரி 5ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: ஊர் விழாக் கமிட்டி அறிவிப்பு
பிப்ரவரி 5ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் விழாக்கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். ஊர் விழாக் கமிட்டியினர் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மதுரை: அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்றத் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் பிறப்பித்தது. அதனை தமிழக சட்டசபையில் நேற்று சட்டமாகவும் நிறைவேற்றியது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மதுரை அவனியாபுத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் கிராம விழா கமிட்டியினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரிலும் பிப்ரவரி 2ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications