தனுஷ் என் மகன்தான்.. விடாமல் விரட்டும் மதுரை கதிரேசன்!
தனுஷ் என்னுடைய மகன் தான் என்று ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும் என்று மதுரை கதிரேசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : தனுஷ் என்னுடைய மகன் தான் என்று ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும் என்று மதுரை கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்லி பெற்றோரான தங்களை பார்க்க மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் ரஜினிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், நாள்தோறும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது கெட்ட விஷயங்களை தவிருங்கள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறார்.
தனது ரசிகர்களுக்கு ஒழுக்கம் பற்றியும், குடும்பத்தை கவனித்துக் கொள்வது பற்றியும் அன்றாடம் அட்டிவைஸ் செய்து வருகிறார் ரஜினி. ரஜினியின் அறிவுரையைப் பார்த்து கதிரேசன் என்பவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

ரஜினிக்கு கதிரேசன் கோரிக்கை
தனுஷ் தங்களின் மகன் என உரிமை கோரிய மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தான் ரஜினிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும். பெற்றோரான தங்களை பார்க்க தனுஷை மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கதிரேசன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை கவனித்துக் கொள்ள சொல்லுங்கள்
தனுஷ் என்னுடைய மகன் தான் என்று ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். தனுஷிடம் பெற்றோரான தங்களை பார்த்துக் கொள்ள அறிவுறுத்துமாறு கதிரேசன் கேட்டுக் கொண்டுள்ளார். தனுஷ் தங்களுடைய மகன் தான் என்று உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி
மேலும் தங்களுக்கு மாத பராமரிப்பு தொகையாக ரூ. 65 ஆயிரம் தர வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரி இருந்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து உரிமை கொண்டாடும் தம்பதி
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனசாட்சிக்குத் தெரியும் தனுஷ் யாருடைய மகன் என்று என மதுரை கதிரேசன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் யாருடைய மகன் என்பதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தாலும், கதிரேசன் தம்பதி தொடர்ந்து தனுஷை தங்களின் மகன் என்றே உரிமை கொண்டாடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications