கிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 3 நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. கிரானைட், பி.கே.எஸ்.கிரானைட், ஆனந்த் கிரானைட் ஆகிய நிறுவனங்கள் மீது 2,426 பக்க குற்றப்பத்திரிகை மதுரை, மேலூர் நீதிமன்றங்களில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ல் அதிகாரிகள் குழுவினர் 175 குவாரிகளில் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை மீறி அங்கு வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அளவீடு செய்தனர். 86 குவாரிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் 150க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக ஒவ்வொரு குவாரியாக கணக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து 84 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இழப்பு தொடர்பாக குவாரி உரிமதாரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
பிஆர்பி, ஆனந்த், பிகேஎஸ் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் ரூ.1398.37 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் இன்று மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷீலா, தனிப்படை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் 2,426 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூர் குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் செல்வக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
மேலூர், கீழவளவு பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பிஆர்பி, ஆனந்த் மற்றும் பிகேஎஸ் நிறுவனங்கள் மீது தலா ஒன்று என மொத்தம் 3 வழக்குகள் தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பிஆர்பி மீது இடத்தை ஆக்கிரமித்ததாக மேலூரை சேர்ந்த சுமதி என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை ஜேஎம் 1வது நீதிமன்றத்தில் இன்று பிஆர்பி மீது தனியாக ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications