ஜொலிஜொலிக்குதே.. ஊமச்சிக்குளம் டூ நத்தம்..தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலம்: 360 டிகிரி சுழலுதே கேமரா
மதுரை: தமிழ்நாட்டின் நீளமான பறக்கும் பாலத்தில், அடுத்த அதிரடியை தேசிய நெடுஞ்சாலை துறை கையில் எடுத்துள்ளது.. இதனால் மதுரைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் தமிழ்நாட்டின் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய அரசு மூலம் கட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி: தமிழ்நாட்டின் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி சமீபத்தில் மதுரையில் திறந்து வைத்தார். ரூ.612 கோடியில் நத்தம் பறக்கும் மேம்பாலம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திறக்கப்பட்டது. மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு, புறவழி பறக்கும் சாலையில் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது..

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலே மிக நீளமான 7.3 கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த பாலம் செல்கிறது. இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து குறையும் என்பதுடன், மதுரை - திருச்சி பயண தூரம் 23 கிமீ வரை குறையும் என்பதே இந்த பாலத்தின் மிகப்பெரிய நன்மையாகும்.
பிரம்மாண்ட பாலம்: இதற்கு முக்கிய காரணம், மிகவும் பரபரப்பான சாலை என்பதுடன், இந்த பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் சாலையும் ஆகும்.. அதனால்தான், நாளுக்கு நாள் நெரிசலும் இங்கு அதிகமானது.. இதை தவிர்க்கவே, பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.. மொத்தம் ஒவ்வொரு 150 அடிக்கும், தூண்கள் வைக்கப்பட்டு, அவைகளை காங்கிரீட் கர்டர் மூலம் இணைத்துள்ளனர்..
இப்படி மொத்தம் 220 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.. பாலத்தில் நவீன எல்டிடி விளக்குகள் ஒளிர்கின்றன.. நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம், அய்யர் பங்களா, திருப்பாலை, போன்ற பகுதிகள், விசால்டி மஹால் , ஊமச்சிகுளம் போன்ற பகுதிகள் என அனைத்து இடங்களிலுமே ஏறி இறங்குவதற்கு ஏற்றவாறு, துணை பாலங்களும் உள்ளன..

சுழலும் விளக்குகள்: மதுரை மாநகரில் இருந்து விஷால் டி மால் அருகே தொடங்கும் இந்த பாலம், ஊமச்சிகுளத்தில் உள்ள மாரணி விலக்கு வரை கட்டப்பட்டுள்ளது... ஊமச்சிக்குளம், நத்தம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பும், தல்லாகுளத்திலும் இறக்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த பாலம் மிக நீளமாக இருப்பதால், பாலத்தில் நள்ளிரவு பயணிக்க, வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்தனர். இதன்காரணமாக, இரவு ரோந்து பணிக்கு மாநகர போக்குவரத்து போலீஸாரும், பெட்ரோல் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்..
அப்படியிருந்தும்கூட, பயணிகளின் அச்சம் தீரவில்லை.. இரவு நேரத்தில் வாகனப்போக்குவரத்து இல்லாமல் இந்த பறக்கும் பாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்காகத்தான் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது.. இப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த பறக்கும் பாலத்தில் 21 இடங்களில் 360 டிகிரி அளவில் சுழலும் தானியங்கி கேமிராக்களை பொறுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது.. கேமிராக்களை தொழிலாளர்கள் பொருத்தி வருகின்றனர்...
ஆட்டோமெட்டிக் கேமிரா: இந்த தானியங்கி கேமிராக்கள், 360 டிகிரி சுழன்று, பாலத்தில் உள்ள காட்சிகள் மொத்தத்தையும் தன்னுள் சேமித்து கொள்ளும். தேவைப்பட்டால் போக்குவரத்து போலீஸார், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அதிகாரிகள், அந்த கேமிரா பதிவுகளைப் பார்த்து விசாரணை நடத்தவும் செய்வார்கள்.. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இந்த நடவடிக்கையானது, இரவில் பாலத்தில் பயணிக்க தயங்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications