பயணிகள் வசதிக்காக...மதுரை விமான நிலையத்தில் ‘மல்லிகைப் பூ’ விற்பனை
மதுரை: நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பறந்த விமானங்களில் பயணிகளோடு, மதுரையின் வாசமும் சேர்த்து பயணம் செய்தது. என்னப் புரியவில்லையா...? மதுரை விமான நிலையத்தில் புதிதாகத் துவக்கப் பட்டுள்ள மல்லிகைப் பூ விற்பனை நிலையத்திலிருந்து பயணிகள் மணக்கும் மல்லிகை வாங்கிச் சென்றனர் என்பதைத் தான் அப்படிக் கூறினோம்.
மதுரை என்றாலே மணக்கும் ‘மல்லி' தான் முதலில் நினைவில் வரும். மதுரை மல்லி அதிகளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப் பட்டு வருகிறது. எனவே, மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சியான மல்லிகை மலரை தங்கள் ஊர்களுக்கு வாங்கிச் செல்லும் வகையில் மதுரை விமான நிலையத்தில் மல்லிகை விற்பனை நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மதுரை விமான நிலைய டெர்மினல் கட்டிடத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையத்தை துவங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது...

மல்லிகையின் மணம்....
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைபோல மல்லிகை பூவும் உலக பிரசித்தி பெற்றதாகும்.

விற்பனை நிலையம்....
இதனை மதுரைக்கு வரும் வெளிநாட்டினரும் வாங்கி செல்லும் வகையில் இங்கு விற்பனை நிலையம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பட்டாசு....
சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்களிடம் பட்டாசை உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன்.

உலக சந்தை....
அதேபோல மதுரை மல்லிகைப்பூ மற்றும் பழ வகைகளை உலக சந்தைக்கு கொண்டு செல்ல தொழில் வர்த்த சங்கத்தினர் முயற்சி எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

ரூ 100க்கு விற்பனை...
ஒன்றரை மீட்டர் மல்லிச் சரம் அழகிய வண்ண அட்டைப் பெட்டியில் வைக்கப் பட்டு ரூ 100க்கு விற்பனைச் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications