'அழகிரியின் அன்புத் தம்பிகள்' மீது திமுக புகார் - போலீஸ் வழக்கு!
மதுரை: அழகிரியின் அன்புத் தம்பிகள் என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மதுரை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட வக்கீல் வேலுச்சாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பிரமுகர்கள் பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி ஆகியோர் மு.க.அழகிரியை பகிரங்கமாக விமரிசித்துப் பேசியது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக பிரமுகர்கள் விமரிசனத்துக்கு அழகிரி இதுவரை பதில் கூறவில்லை. இந்த நிலையில், அழகிரியின் ஆதரவாளர்கள் திடீரென போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் பொன்.முத்துராமலிங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். போஸ்டரில் அழகிரியின் அன்புத்தம்பிகள் என்றிருந்ததே தவிர, அச்சடித்த அச்சகப் பெயரோ, அழகிரி ஆதரவாளர்கள் பெயரோ இல்லை.
இந்தப் போஸ்டர் குறித்தும் அதை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திமுக மாநகர் மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் சு.கருணாநிதி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், தெப்பக்குளம், விளக்குத்தூண், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையங்களில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications