For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிகர் முக்கியமா?... பீசு முக்கியமா? ... என்னங்கடா இது புது உணவு ஐட்டமா இருக்கு...!

மதுரையில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் என்ற ஹோட்டல் சக்கை போடு போடுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் வைரலாகி உள்ளது

    மதுரை: மதுரையில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் என்ற ஹோட்டல் கிராமிய மணம் கமழும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை என்றாலே தூங்கா நகரம் ஆகும். இந்த நகரில் இரவு 12 மணி ஆனாலும் சுட சுட இட்லி, பரோட்டா போன்ற சிற்றுண்டிகள் கிடைக்கும். மதுரை முக்கியமான நகரம் என்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டமும் இருக்கும்.

    அப்படிப்பட்ட மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றதாகும். வாடிவாசலை திறந்தால் அங்குள்ள காளைகள் சீறி பாயும் அழகே தனி.

    தேய்ந்து வரும் பாரம்பரியம்

    தேய்ந்து வரும் பாரம்பரியம்

    அந்த காலங்களில் மண் பானைகளில் செய்த சமையல் இரண்டு, மூன்று நாட்களாகினாலும் கெடாமல் இருக்கும். கிராமிய மணம் வீசும் உணவுகள் நாட்கள் செல்ல செல்ல தேய்ந்து வந்தது. ஆனால் தற்போது மண் பானை சமையல் துளிர் விட்டு வருகிறது. இன்னமும் கூட பெரும்பாலான கிராமிய மணம் கமழும் மண் பானை சமையல் களைகட்டுகிறது.

    கெட்டப்பே அள்ளுதே

    கெட்டப்பே அள்ளுதே

    மதுரை அண்ணா நகர் மெயின் ரோட்டில் சினிப்பிரியா தியேட்டர் அருகில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் ஒன்று உள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடையின் கெட்டப் வாடிவாசல் ரேஞ்சுக்கு உள்ளது. உள்ளே மண் குடிசை போன்ற அமைப்பு ஆகியன பார்ப்போரை சுண்டி இழுக்கிறது.

    மெனு லிஸ்டும் செமையாக உள்ளது

    மெனு லிஸ்டும் செமையாக உள்ளது

    ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுகளுக்கு மதுரையிலிருந்து சினிமாவில் கலக்கிய நடிகர் வடிவேல் மற்றும் பிற நடிகர்களின் காமெடி டயலாக்குகளை வைத்துள்ளனர். அதில் நானா சேத்த கூட்டம் என்ற பெயரில் கிரீன் சாலட், ஆனியன் மற்றும் டொமேடா சாலட், குக்கும்பர் சாலட் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    சூப்பரோ சூப்பர்

    சூப்பரோ சூப்பர்

    சூப்பரப்பு என்ற பெயரில் சுவீட் கார்ன் வெஜ் சூப், ஹாட் அன்ட் சோர் வெஜ் சூப், கேன்ட்டன் வெஜ் சூப், வெஜ் மேஞ்சோ சூப், மட்டன் எலும்பு சூப், நாட்டுக் கோழி சூப், சுவீட் கார்ன் சிக்கன் சூப், ஹாட் மற்றும் சோர் சிக்கன் சூப், கேன்ட்டன் சிக்கன் சூப், சிக்கன் மேஞ்சோ சூப்களும் இடம்பெற்றுள்ளன.

    அய்யோ அய்யோ

    அய்யோ அய்யோ

    அய்யோ சிக்கிக்கிச்சு என பெயரை பார்க்கும் போது ஏதோ கோழி, ஆடு சிக்கிக்கிச்சு அதான் இந்த பேருனு நெனக்காதீங்க. நூடுல்ஸைதான் இப்படி கூறுகின்றனர். சிக்கன், வெஜ், எக் நூடுல்ஸ் என வெரைட்டிகள் உள்ளன.

    அண்ணனுக்கு ஊத்தாப்பம்

    அண்ணனுக்கு ஊத்தாப்பம்

    மாஸ்டர் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்ற பெயரில் தோசை, நெய் ரோஸ்ட், முட்டை தோசை, மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, சப்பாத்தி, பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா, சிலோன் மட்டன் பரோட்டா ஆகியனவும் இடம்பெற்றுள்ளது.

    குழம்பு- குழம்பு

    குழம்பு- குழம்பு

    சோறு - சோறு , குழம்பு- குழம்பு என ஒரு பகுதி உள்ளது. இதில் சோறு, குழம்பு, ரசம், மோர் உள்ளிட்ட ஐட்டங்கள் பரிமாறப்படுகின்றன. ஃபிகர் முக்கியமா பீசு முக்கியமா என்ற பகுதியில் பிரியாணி வகைகள் வரிசைக்கட்டுகின்றன. முட்டை, சிக்கன், மட்டன், நாட்டுக் கோழி பிரியாணி ஆகியன உள்ளன.

    பொறளியா இருக்கு

    பொறளியா இருக்கு

    என்னடா இது புது பொறளியா இருக்கு என்ற பெயரில் வாடிவாசல் காடி சாப்ஸ், வாடிவாசல் சிக்கன், வாடிவாசல் மீன் புட்டு, வாடிவாசல் முட்டை ஆகியன ஐட்டங்கள் உள்ளன. தாவுறது இதில் மட்டன் ஐட்டங்களும் ஓடுறதுவில் கோழி ஐட்டங்களும், நீந்துறதில் மீன், நண்டு, இறால் ஐட்டங்களும் உள்ளன.

    முட்டையில்லாமலா

    முட்டையில்லாமலா

    ஒரு படத்தில் முட்டையை ஓடுறது போடறது என்று விவேக் விவரிப்பார். அதுபோல் முட்டை ஐட்டங்களும் உள்ளன. சங்கி மங்கி அடங்கோ என்ற பெயரில் பொங்கி பொறிச்சது என்ற பெயரில் பிரைடு ரைஸ் வகைகள் உள்ளன. சேர்ந்து செய்த கலவை நான் என்ற பகுதியில் சாத்வீகம் ப்ரச்சோதகம் என இரு பிரிவுகள் உள்ளன. இதில் மிக்ஸடு வெஜ் கர்ரி, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் வெஜிடபிள் உள்ளிட்ட சைவ வகைகளும் பட்டர் சிக்கன், சிக்கன் டிக்கா உள்ளிட்ட வகைகளும் காணப்படுகின்றன.

    அண்ணனின் விழுதுகள்

    அண்ணனின் விழுதுகள்

    இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் என்ற பெயரில் மஞ்சூரியன், ஜிஞ்சர், சில்லி, ஷேஸ்வான் உள்ளிட்ட பிரை வகைகள் காணப்படுகிறது. என்ன வேணும், எண்ணதான் வேணும் என்ற வடிவேலுவின் பிரபல காமெடியின் பெயரின் கீழ் எண்ணெயில் பொரிக்கப்பட்ட மஸ்ரூம் 65, சிக்கன் 65, கோபி 65, பிஸ் ஃபிங்கர் உள்ளிட்டவை கிடைக்கிறது. தீப்பொறி திருமுகம் என்ற பெயரில் தந்தூரி சிக்கன் புல், தந்தூரி சிக்கன் ஹாஃப், கிரில் சிக்கன், டாங்ரி கபாப் ஆகியன கிடைக்கிறது.

    எந்த வகை எண்ணெய்

    எந்த வகை எண்ணெய்

    பொதுவாக ஹோட்டல் சாப்பாடு என்றால் அதில் அஜினோமோட்டோ, அதிக எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள் என்பதால் ஒரு சிலர் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த ஹோட்டலில் அஜினோமோட்டோவுக்கு டாடா சொல்லப்பட்டுவிட்டது. அதுபோல் சைவ மற்றும் அசைவ உணவுகள் செக்கு எண்ணெயில் சமைக்கப்படுகின்றன. வயிறார சாப்பிடுங்கள், மனதார வாழ்த்துகள் என்று நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மெனுக்களும் செந்தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. அப்பறம் என்னங்க மதுரைக்கு போனால் நேராக வாடிவாசலுக்கு போய்ட வேண்டியதுதானே.

    English summary
    Madurai is famous for hotel. Its already known as Thoonga Nagaram. Here a hotel whose name is Vaadivasal traditional hotel goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X