நேற்று "பாட்ஷா".. இன்று "தளபதி".. டேரா போட்டு தலைவர்களைச் சந்திக்கும் நக்மா.. பின்னணி என்ன?

மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா சென்னையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா இன்று சந்தித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் அண்மைக் காலமாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு இருவரும் கடுமையாக தாக்கி பேசியுள்ளனர். திருநாவுக்கரசர் யாரென்றே தெரியாது என்று இளங்கோவன் கூறியதோடு, திருநாவுக்கரசர் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடியதற்காக திருநாவுக்கரசரை கடுமையாக சாடிய இளங்கோவன் கடந்த வாரம் திருநாவுக்கரசர் நடராஜனை சந்தித்து பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காங்கிரசில் நிலவிய கோஷ்டி மோதல் திருநாவுக்கரசர் வந்த பிறகு கொஞ்சம் அடங்கியிருப்பதாக கருதப்பட்ட நிலையில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இளங்கோவன் புகார் கூறி வருகிறார்.

 ஆதரவு நிலைப்பாட்டால் அதிருப்தி

ஆதரவு நிலைப்பாட்டால் அதிருப்தி

எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் கூட அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுமாறு டெல்லியில் முறையிட்டார் திருநாவுக்கரசர். ஆனால் இளங்கோவனும், ப.சிதம்பரமும் திமுக எடுக்கும் முடிவே தங்களின் முடிவு என்று திட்டவட்டமாக கூறியதோடு அதற்கு சம்மதமும் பெற்றனராம்.

 டேரா போட்ட நக்மா

டேரா போட்ட நக்மா

தமிழக காங்கிரசில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் நிலையில், தனது நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காககே நக்மா சென்னை வந்துள்ளாராம். கடந்த ஒரு வாரமாக இதற்காக சென்னையிலேயே தங்கி முக்கிய நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து வருகிறாராம் நக்மா. காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு நடிகையான குஷ்பு வெளியூர் சென்றுள்ளதும் நக்மாவின் டேராவிற்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

 சைலன்ட் திட்டம்

சைலன்ட் திட்டம்

குஷ்புவிற்கும் நக்மாவிற்கும் இடையே கட்சியில் கடுமையான போட்டி இருக்கிறது. இந் நிலையில் குஷ்பு இல்லாத சமயத்தை பயன்படுத்தி தனது அரசியல் செயல்பாடுகளை தலைமைக்கு எடுத்துக்காட்டும் வகையில் நக்மா தலைவர்களை சந்தித்து வருகிறாராம்.

 ரஜினியுடன் சந்திப்பு

ரஜினியுடன் சந்திப்பு

சென்னையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த நக்மா இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல நண்பர்கள் என் ற ரீதியில் சந்தித்ததாக கூறினார். எனினும் பாஜக ரஜினியை ஈர்க்க எடுக்கும் முயற்சிகளை முறியடித்து காங்கிரஸ் பக்கம் ரஜினியை ஈர்க்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 ஸ்டாலினுக்கு வாழ்த்து

ஸ்டாலினுக்கு வாழ்த்து

இதே போன்று இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நக்மா சந்தித்தார். திமுக செயல்தலைவரான பின்பு முதன்முறையாக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் நக்மா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+