கொடநாடு கொலை: விபத்தில் சிக்கிய சாயனிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம்!
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயன் மீது டேங்கர் லாரி மோதியதை தொடர்ந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
கோவை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயனிடாம் கோவை மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டுள்ளனர். எஸ்டேட் நோக்கி வந்த வாகனங்கள் சோதனை சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதவியாகியிருந்தது. அதன் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் போயஸ் கார்டன் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 6 பேர் சிக்கினர். ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் நேற்று இரவு சாலை விபத்து ஒன்றில் பலியானார் என்று போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு கேரள நபரான சாயனை போலீஸார் தேடி வரும் நிலையில் அவரும் விபத்தில் சிக்கினார். இதில் சாயனின் மனைவியும், குழந்தையும் பலியாகினர். படுகாயம் அடைந்த சாயன், ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சாயன் என்பதாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் கோவை மருத்துவமனைக்கு நேரில் வந்த மாஜிஸ்திரேட் அவரிடம் வாக்குமூலம் பெற்றார். கொடநாடு கொலை, குறித்து வாக்குமூலமாக சாயன் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications