இன்று இதுதான் நடக்க போகுது.. வானிலையில் மெகா மாற்றம்.. வல்லுனர் வெளியிட்ட முக்கிய வார்னிங்!
சென்னை: இன்று தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் அப்டேட் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டாலும் இன்னும் வெயில் குறையவில்லை. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டால் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.
வெயில் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
வெயில் என்ன? : நேற்று கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வானிலை நிலவியது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நேற்று கடுமையான வெயில் நிலவியது. 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்டி நேற்று வெயில் நிலவியது.
இதையடுத்து கடந்த வாரத்தோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் பகுதிகளில் கனமழை பெய்யும். மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவிலும் புயல்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். எப்போதும் ஜூன் முதல்வாரம் தொடங்கும் இந்த மழை இந்த முறை மே இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் மழை பெய்ய தொடங்கவில்லை. முக்கியமாக சென்னையில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் அப்டேட் வெளியிட்டு உள்ளது.
அதில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் இன்று நிலவும். தமிழ்நாட்டிலும் வெயில் மிக கடுமையாக சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும். சென்னையில் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை தொடும். இங்கே கடல் காற்று அடிக்க வாய்ப்பு குறைவாக உள்ளதால் வெயில் அதிகமாக இருக்கும்.
இன்னும் மழைக்காலம் தொடங்காத நிலையில் வடமேற்கு தமிழ்நாட்டு உட்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. நீலகிரியில் ஒன்று இரண்டு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. சென்னை மற்றும் அதன் உட்பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications