97% சதவீதம் பேர் சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு.. போயஸ் கார்டனை அலறவைத்த ஆன்லைன் சர்வே முடிவு
சட்டப் பஞ்சாயத்து இயக்கம் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலா முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 97 சதவீதம் பேர் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியுள்ளார். அடுத்ததாக முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்ய சசிகலா முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை சர்வே நடத்தப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர் சர்வேயில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது 94 சதவிகிதம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 97 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. இவ்வாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications