ரூ.500 நோட்டு செல்லவில்லை எனில் அம்பானியா கியூவில் நிற்பார்? மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் அம்பானியோ, அதானியோ பாதிக்கப்படப் போவதில்லை. சாமானிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 9ம் தேதியில் இருந்து செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். கையில் பணம் இருந்தும் ஏழைகள் போல் செலவிட முடியாமல் தவித்து வந்தனர். அன்றாடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூட சாதாரண மக்கள் பெரும்பாடு பட்டனர்.

இந்நிலையில், மோடியின் இந்த அறிவிப்பைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மோடியின் இந்த அறிவிப்பால் அம்பானி, அதானி, நத்தம் விஸ்வநாதன், ஓ. பன்னீர் செல்வம் போன்ற கோடிஸ்வரர்கள் பாதிக்கப்படப் போவதில்லை; அவர்கள் வங்கிக்கு சென்று கால் கடுக்க நிற்கவும் தேவையில்லை. சாமானிய மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், "ரொக்கப்பணம் மட்டும் கருப்பு பணம் இல்லை, கருப்புப் பண முதலைகளின் எந்த வகை முதலீடுகளையும் முடக்காமல் சாமானியர்களின் சேமிப்பு சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் இந்த திடீர் தாக்குதல். இந்தியாவில் 90 சதவீத முதலீடுகள் பல வகைகளிலும் 2 சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் ஏழரை லட்சம் கோடி ரூபாயை வராக்கடனாக வைத்துள்ளனர். அவர்களது பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடி அரசால் கருப்புப் பணத்தை எப்படி மீட்க முடியும்" என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.
அம்பானி, அதானிகள் கருப்பு பணத்தை 500 மற்றும் 1000 ரூபாயாக வைத்திருப்பதில்லை என்பது உள்ளிட்ட மத்திய அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications