சொத்து விபரங்களை வெளியிட நாங்க ரெடி, நீங்க ரெடியா?: வைகோவுக்கு சந்திரகுமார் சவால்
சென்னை: சொத்து விபரங்களை வெளியிட நாங்கள் தயார், வைகோ தயாரா என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையில் சென்னை தி. நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் போட்டி பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வைகோ
கைவோவை நம்பி விஜயகாந்த் எப்படி செல்லலாம்?. பழிவாங்கும் எண்ணம் கொண்ட வைகோவை விஜயகாந்த் நம்பலாமா? எங்கள் குடும்ப பிரச்சனையில் வைகோ எப்படி
தலையிடலாம்? தேர்தலில் தமது இயக்கத்தை போட்டியிட வைக்காதவர் வைகோ.

வைகோவின் சொத்து
வைகோவின் மருமகன் ஒரு பெரிய நிறுவனத்தில் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளார். வைகோவின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக் கணக்கை காண்பிக்க சொல்லுங்க. நாங்கள் எங்களின் சொத்து விபரங்களை வெளியிடுகிறோம். இது போன்ற சவாலுக்கு எல்லாம் வைகோ வர மாட்டார்.

பணம்
நாங்கள் பிற கட்சிகளிடம் பணம் வாங்கியதாகக் கூறுகிறார்கள். நாங்கள் எந்த கட்சியிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதை நிரூபிக்க அவர்கள் தயாரா? யாரிடமும் பணம் வாங்கவில்லை என வைகோ, விஜயகாந்த், பிரேமலதா சத்தியம் செய்ய தயாரா?

அதிமுக-திமுக
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. யாரையும் நேரில் சந்திக்காத விஜயகாந்த் கட்சியினரிடம் போனில் பேசியுள்ளார்.விஜயகாந்த் உருக்கமாக பேசியதால் பலர் எங்கள் அணிக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள்.

தேமுதிக
தேமுதிக அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தேமுதிகவில் பல எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் இணைய உள்ளனர். ரூ.86 கோடியில் நிலம்
ஒன்று இந்த ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது யாருடையது என்பதை தெரிவிக்க மாட்டேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். என்னை நம்பி வரும் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications