எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் விஜயகாந்த் தான் பொறுப்பு: வி.சி சந்திரகுமார் பரபரப்பு பேட்டி
திருவண்ணாமலை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற மக்கள் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியின் தலைவர் சந்திரகுமாருக்கு எதிராக தேமுதிகவினர் ஊர் எல்லையில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, உங்கள் ஊருக்கு மக்கள் தேமுதிக என்று வந்தால் அவர்களை வர அனுமதிக்காதீர்கள். அந்தக் கூட்டத்தில் கலாட்டா செய்து, சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை எங்களால் நிரூபிக்க முடியும். இருந்தபோதிலும் நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், நாங்கள் போகின்ற இடங்களில் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ தேமுதிகவும், அதன் தலைவர் விஜயகாந்த்தும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications