தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரே வெளியேறு!... சென்னையில் சங்கர மடம் முற்றுகை!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத இளைய மடாதிபதி விஜயேந்திரர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : சங்கர மடத்தை மூட வேண்டும், சொத்துகளை முடக்கி அரசுடைமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேத்துபட்டில் உள்ள சங்கர மட இடத்தை மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் செயலுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான இடத்தை மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைய மடாதிபதி விஜயேந்திரரின் படத்தை பெண்கள் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம்
யாரும் பேசாத செத்துப்போன சமஸ்கிருத மொழியை சங்கட மடம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அந்த ஆரிய மொழிகளுக்கு சவால்விட்டு தனி இலக்கியம் மூலம் தலை தூக்கி நிற்கிறது தமிழ் மொழி.

தமிழ் மொழியை அழிக்கும் நோக்கம்
தமிழ் மொழியை அழிக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை. தியானம் செய்பவர் ஒரு அறைக்குள் செய்ய வேண்டும், பொது மேடையில் வந்து ஏன் தியானம் செய்தார்.

மடத்தை மூட வேண்டும்
விஜயேந்திரர் செய்தது தியானம் அல்ல நீசப்பாஷையான தமிழை என் காதால் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தமிழனின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டும். சங்கர மடத்தை இழுத்து மூட வேண்டும், அதன் சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் என்று போராட்டத்தை முன் எடுத்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடரும் என எச்சரிக்கை
தடையை மீறி பேரணியாக வந்து சேத்துபட்டு சங்கரை மடத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். எனினும் தமிழகம் முழுவதும் சங்கர மடத்திற்கும், விஜயேந்திரருக்கும் எதிரான போராட்டங்கள் தொடரும் என்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications