மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அள்ளிய கூட்டம்.. காவிரியே பெரிது என காட்டிய திருச்சி!
மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
திருச்சி: மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
திருச்சியில் மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றார்.

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதே இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கமீலா நாசர், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.
அதாவது காவிரி பெரிதா கங்கை பெரிதா என்ற கேள்விக்கு காவிரியே பெரிது எனக்காட்டிய திருச்சிக்கு நன்றி! ஊர் கூடி தேர் இழுப்போம் அனைவரும் வாரீர்!! என தெரிவித்துள்ளார்.
LIVE: MNM Public Meet | Trichy #MNMTrichy #MNMForCauvery https://t.co/ny15VMehJX
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 4, 2018


Click it and Unblock the Notifications
