கன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்றினை போலீஸார் மீட்டனர்.
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
குமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பொற்றையடி கிராமம். இங்கு கிருஷிகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில், இன்று காலை ஆணின் பிணம் அரைகுறையாக எரிந்த நிலையில், கிடந்ததை அவ்வழியாக சென்றோர் பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
35 வயது மதிக்கத்தக்க அந்த நபரை கொலை செய்தவர்கள், பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்து போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications