துரை வைகோவுக்காக தீக்குளிப்போம் என மதிமுக நிர்வாகிகள் மிரட்டல்- மல்லை சத்யா நாளை 'டிஸ்மிஸ்'?
சென்னை: மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை துரை வைகோ எம்பி திரும்பப் பெற வேண்டும்; அல்லது துரை வைகோவின் முடிவைக் கண்டித்து தீக்குளிப்போம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வலது கரமான அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது, வைகோவின் மகன் துரை வைகோ எம்பி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். துரை வைகோவுக்கான அதீத முக்கியத்துவத்தை மல்லை சத்யா 4 ஆண்டுகளாக ஏற்கவில்லை என்பதுதான் இந்த அதிருப்தியின் பின்னணி.

மேலும் மதிமுகவில் துரை வைகோவால் ஜாதிய அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சென்னையில் அண்மையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவிலும் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் துரை வைகோ, பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். இதற்கு பின்னணியில் இருப்பதும் மல்லை சத்யா என்பது துரை வைகோவின் கோபம்.
இதனால், மல்லை சத்யாவை, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய கோரி துரை வைகோவின் ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தார். மேலும் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் வரும் 20-ந் தேதி நடைபெறும் எனவும் வைகோ அறிவித்தார்.
இந்த நிலையில்தான் திடீரென இன்று மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ எம்பி அறிவித்தார். இது தொடர்பான நீண்ட அறிக்கையில் மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடமால், ஒருவர் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார் துரை வைகோ.
துரை வைகோவின் இந்த அறிவிப்பு மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுததி உள்ளது. துரை வைகோ தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். துரை வைகோ தமது முடிவை திருமப்ப பெறாவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
இதனிடையே துரை வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் செந்திலதிபன் தெரிவித்தார். மேலும் நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழுவில் சுமூக முடிவு கிடைக்கும் என்றார் செந்திலதிபன். சென்னையில் நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும்; இதன் பின்னர் துரை வைகோ தமது விலகல் முடிவை திரும்பப் பெறுவார் என்கின்றன மதிமுக வட்டாரங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications