ஜெர்மனி பெண் வாயில் துணியை திணித்து பலாத்காரம்.. குற்றவாளியின் கம்ப்யூட்டர் வரைபடம் வெளியீடு!
மாமல்லபுரத்தில் ஜென்மனி சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்த நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை: மாமல்லபுரத்தில் ஜென்மனி சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்த நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அளித்த தகவலின் பேரில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்துக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண் ஜெசீனா 5 பேருடன் சுற்றுலா வந்தார். அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து அவர்கள் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் ஆள்நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் குளித்த அவர் நீச்சல் உடையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள் ஜெசீனாவை அருகில் இருந்த சவுக்குத் தோப்புக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

2 பேர் பலாத்காரம் செய்தனர்
இதுதொடர்பாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர், ஜெர்மன் தூதரகத்திலும் நடந்ததைக் கூறினார். இதுதொடர்பாக விசாரித்த காவல்துறையினரிடமும் 28 வயது மதிக்கத்தக்க ஒரு நபரும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபரும் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார்.

வாயில் துணியை வைத்து..
மேலும் தான் சத்தம்போடாமல் இருக்கும் வகையில் தனது வாயில் துணியை வைத்து திணித்ததாகவும் அவர் தெரிவித்தார். தான் கெஞ்சியும் தன்னை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர் என்று கூறிய ஜெசினா பின்னர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு காவல்நிலையம் வந்ததாக கூறினார்.

கம்ப்யூட்டர் படம் வெளியீடு
ஜெசினா கூறிய அடையாளங்களை வைத்து பலாத்காரம் செய்த நபர்களின் கம்ப்யூட்டர் வறைபடத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் 4 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஜெர்மனி தூதரகம் நெருக்கடி
இதனிடையே ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் ஜெசினாவிடம் நடந்த அசம்பாவிதம் குறித்து விசாரித்தனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஜெர்மனி தூதரக அதிகாரிகள் போலீசாருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இன்று ஊருக்கு போகிறார்
இந்நிலையில் கடும் மன உளைச்சலில் உள்ள ஜெசினா, இன்று தனது சொந்த நாட்டுக்கு செல்லவுள்ளார். வழக்கு நடக்கும் போது அவர் இங்கிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ள போலீசார், ஜெசினா செல்வதால் பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிவத்துள்ளனர்.

துப்பு துலக்க உத்தரவு
இதனிடையே நேற்று மாலை 6 மணி அளவில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. நஜ்மல்ஹோடா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் தனிப்படை போலீசாருடன் தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இன்றுக்குள் குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கில் தீவிரமாக துப்பு துலக்க வேண்டும் என்று தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications