நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை... கைதான சேகர் புழல் சிறையில் அடைப்பு
எண்ணூரில் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் முத்து என்பவரின் மகள் ரித்திகா. 3 வயதான ரித்திகா சனிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு கிடந்தாள். உடனடியாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

ரித்திகா ஒரு பவுனில் தங்க செயின், கம்மல், வெள்ளி கொலுசு, வெள்ளிக் கொடி அணிந்து இருந்தாள். அவளது உடல் மீட்கப்பட்ட போது நகைகள் இல்லை. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காக ரித்திகாவை எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொன்றதாக தகவல் வெளியானது. நகைக்காக அந்த குழந்தை கொல்லப்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ரேவதியின் தந்தை, பாலியல் வன்கொடுமை செய்து ரித்திகாவை கொன்றதாக தகவல் பரவியது. ரேவதியின் தந்தை சேகரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், திருவொற்றியூர் நீதிமன்றத்தில் சேகரை போலீசார் ஆஜர்படுத்தினர். சேகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சேகர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications