பொட்டை என்று திட்டிய கள்ளக்காதலி... கோபத்தில் கொன்று மூட்டை கட்டிய கணவர்
சென்னை: திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த பெண் தனது ஆண்மைக் குறைவை சுட்டிக் காட்டி பொட்டை என்று திட்டியதால் கோபமடைந்த காவலாளி அவரைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டினார். பின்னர் சாக்குமூட்டையை தனது நண்பர்கள் உதவியோடு கடத்த முயன்றபோது போலீஸாரிடம் சிக்கினார்.
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராஜ் (40). இவர் சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணி செய்து வந்தார். திருமணமாகி மனைவி இவரை விட்டுப் பிரிந்து போனதால் தனியாக வாழ்ந்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்த தனலட்சுமி (37) என்ற பெண்ணை சேதுராஜ் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். தனலட்சுமி ஏற்கனவே திருமணானவர். அவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் போய் விட்டார்.
2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமியை சேதுராஜ் கொலை செய்து விட்டார். அவரைப் போலீஸார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். சேதுராஜ் அளித்த வாக்குமூலம்:

10ம் வகுப்பு வரை
எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில். ஆனால் எனது பெற்றோர் கேரள மாநிலம் மூணாறில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தனர். இதனால் நான் மூணாறில் உள்ள பள்ளியில் 10-வது வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு படிக்கவில்லை.

ஆண்மைக் குறைவால் பிரிந்து போன மனைவி
எனக்கு திருமணம் நடந்தது. ஆனால் எனக்கு ஆண்மைக்குறைவு இருந்ததால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு நான் சென்னை வந்து செக்யூரிட்டி நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்தேன்.

தனலட்சுமியின் அன்பு
கே.கே.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணி செய்தேன். அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் தனலட்சுமி வேலை செய்து வந்தாள். ஒரே குடியிருப்பில் வேலை செய்ததால் நானும், தனலட்சுமியும் அடிக்கடி சந்திப்போம். தான் வேலை செய்யும் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வந்து தனலட்சுமி எனக்கு கொடுப்பாள். என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டாள். அவளது அன்பால் ஈர்க்கப்பட்ட நான் அவள் மீது காதல்வயப்பட்டேன்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்த தனலட்சுமி
நான் மனைவியை பிரிந்து வாழ்வது போல தனலட்சுமியும் தனது கணவரை பிரிந்து வாழ்ந்தாள். நான் விரும்பியது போல, தனலட்சுமியும் என்னை விரும்பினாள். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தோம்.

சுகம் தர முடியவில்லை
எனக்கு இருந்த ஆண்மைக்குறைவால், தனலட்சுமி எதிர்பார்த்த இல்லற சுகத்தை என்னால் கொடுக்க முடியவில்லை. இதனால் தனலட்சுமிக்கும், எனக்கும் இரவு படுக்கையில் சண்டை வரும். சண்டையை தவிர்க்க நான் தினமும் மது அருந்தி விட்டு இரவில் வீட்டுக்கு வருவேன். சாப்பிட்டு விட்டு போதை மயக்கத்தில் தூங்கி விடுவேன்.

பொட்டை என்று திட்டினார்
கடந்த திங்கள் அன்று இரவும் அதுபோல் தூங்கி விட்டேன். ஆனால் நள்ளிரவில் தனலட்சுமி என்னிடம் உறவு வைக்க துடித்தாள். என்னால் முடியாததால், என்னை பொட்டைப் பயல் என்று கேவலமாக திட்டினாள். இதனால் கோபம் கொண்ட நான், அவளது கன்னத்தில் அடித்து, கழுத்தையும் இறுக்கினேன். பின்னர் அவளது தலையை சுவரில் தள்ளி தாக்கினேன். இதில் அவள் இறந்துபோனாள் என்று கூறியுள்ளார் சேதுராஜ்.












Click it and Unblock the Notifications