”மகளிர்க்காக” பட பாணியில் பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய போதை ஆசாமிக்கு ஜெயில்!
கோவை: கோவையில் காவல் நிலையத்திற்கு போன் செய்து பெண் காவலர்களிடம் ஆபாச பேச்சு பேசிய போதை ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் குடிப் பழக்கம் உள்ளவர். இரவு நேரங்களில் போதை தலைக்கு ஏறியதும் தன்னுடைய செல்போனிலிருந்து ஏதாவது ஒரு இலவச அழைப்புக்கு தொடர்புகொண்டு அவர்களுடன் வம்பிழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக போதை ஏறியதும் அன்னூர் காவல் நிலைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அங்குள்ள காவலர்களிடம் வம்பிழுப்பதும், பெண் காவலர்களிடம் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார்.
இந்நிலையில் மருதாச்சலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்தி விட்டு அன்னூர் காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பணியில் இருந்த பெண் காவலர் மாதம்மாளிடம் ஆபாசமாக பேசியும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாதம்மாள் அளித்த புகாரின் பேரில், அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மருதாச்சலத்தைக் கைது செய்துள்ளனர்.
-
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications