காதலிக்க மறுப்பு: இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே அம்மனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணும், திருவண்ணாமலையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரும், வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அங்கு கோமதியை மாரிமுத்து ஒருதலையாக பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கோமதி வீட்டிற்கு சென்ற மாரிமுத்து கோமதியை மிரட்டி காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கோமதி மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து கோமதி மீது வீசியுள்ளார். இதில் காயமடைந்த கோமதி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications